அரசு பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

25 January 2025

சிவகங்கை மாவட்டம், பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவன் மின்சாரம் தாங்கி உயிரிழப்பு.


உயிரிழந்த மாணவன் குடும்பத்தினருக்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் சக்தி சோமையா(வயது14) தாயாரின் பெயர் வளர்மதி தந்தை இல்லாத நிலையில் பள்ளியில் கணினி வகுப்பிற்காக கணினி அறையில் கணினி இணைப்பினை பள்ளி உதவியாளர் கொடுக்க சொல்லி இருக்கிறார்.

கணினி இணைப்பினை கொடுக்க முயற்சித்த பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உள்ளது.

அவரை சிகிச்சைக்காக காரைக்குடி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் மாணவனை மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு மாணவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என கூறினார்கள்.

இதனை அடுத்து பள்ளி மாணவனின் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் காரைக்குடி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு பள்ளி மாணவனின் உயிரிழப்பிற்கு பள்ளி நிர்வாகமே முழு காரணம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து காரைக்குடி வட்டாட்சியர் ராஜா நேரில் சென்று சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தார் பின்னர் காரைக்குடி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு சென்று பள்ளி மாணவனின் ஊர் பொதுமக்களிடமும் உறவினர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்த நிகழ்வினை கேள்விப்பட்ட தமிழக முதல்வர் சிவகங்கை மாவட்டம் பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் மின்சாரம் தாக்கி உயிர் இழந்த சக்தி சோமைய (14) குடும்பத்தினருக்கு ரூபாய் 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

செய்தியாளர்:- சிவபிரசாத்.கா