சிவகங்கை கல்லூரி மாணவர் புதுதில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் தேர்வு

25 January 2025



சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவர் பி. ரஞ்சித் தில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார்.

காரைக்குடி 9 -ஆவது பட்டாலியனில் இந்த ஆண்டு மொத்தம் 2,881 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களில் இரண்டு மாணவர்கள் தலைநகர் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பின் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த இருவரில் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் பி. சிரஞ்சித்தும் ஒருவர் ஆவார். இவரை கல்லூரி முதல்வர் க. துரையரசன், மூத்த பேராசிரியர்கள் ந. அழகுச்சாமி, இல. கலைச்செல்வி ஆகியோர் பாராட்டி அனுப்பி வைத்தனர். கல்லூரியில் தேசிய மாணவர் படையைச் சிறப்பாக வழிநடத்தி வரும் தேசிய மாணவர் படை அதிகாரி சௌ. சதீஸ் கண்ணாவை கல்லூரி முதல்வர், மூத்த பேராசிரியர்கள் பாராட்டினர்.

செய்தியாளர்:-
சிவபிரசாத்.கா