தூண் அகற்றும் பணி நடைபெறும் போது ஜேசிபி ஆபரேட்டர் பலி ..!மதுரை மாட்டுத்தாவணி!!

13 February 2025

மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள நக்கீரர் தோரண வாயில் நேற்று இரவு இடித்து அகற்றப்பட்டது.

இதில் ஜே.சி.பி., டிரைவர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியானார். இப்பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் பலத்த காயமடைந்தார். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மதுரை மாட்டுத்தாவணி ஆர்ச் அகற்றியபோது தூண் சாய்ந்து ஜே.சி.பி ஆபரேட்டர் பலி

மதுரை மாட்டுத்தாவணி ஆர்ச் அகற்றியபோது தூண் சாய்ந்து ஜே.சி.பி ஆபரேட்டர் பலி
நமது நிரு

இதில் ஜே.சி.பி., டிரைவர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியானார். இப்பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் பலத்த காயமடைந்தார். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இரவு நேரத்தில் பயணிகள் அலைக்கழிக்கப்பட்டனர்.

மதுரையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நுழைவு வாயில்களை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆறு மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மாநகராட்சி சார்பில் நேற்று இரவு 11:00 மணிக்கு மேல் 2 ஜே.சி.பி.,க்கள் மூலம் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள நக்கீரர் தோரண வாயிலை இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது இடிபட்ட தோரண வாயில் ஜே.சி.பி., வாகனம் மீதே எதிர்பாராத விதமாக விழுந்தது.

இதில் இப்பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் சிந்தாமணியை சேர்ந்த நல்லதம்பி, ஜே.சி.பி., டிரைவர் நாகலிங்கம் ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் பலத்த காயத்துடன் நல்லதம்பி மீட்கப்பட்டார்.

ஒரு மணிநேரத்திற்கு மேல் போராடி மீட்கப்பட்ட நாகலிங்கம், உயிரிழந்தார். இதையொட்டி மாட்டுத்தாவணி பகுதியில் அறிவிப்பின்றி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

இதனால் மாட்டுத்தாவணி, ஆம்னி பஸ் ஸ்டாண்டுகளுக்கு செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்