தேவகோட்டை அருகே நெடுஞ்சாலை துறையினர் தரமற்ற சாலை அமைத்ததாக குற்றச்சாட்டு.

10 July 2021

தேவகோட்டை அருகே நெடுஞ்சாலை துறையினர் தரமற்ற சாலை அமைத்ததாக குற்றச்சாட்டு.


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கடகம்பட்டி கிராமத்திற்கு தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் மூலம் சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் கடகம்பட்டி விளக்குரோட்டில் இருந்து 1200 மீட்டருக்கு புதிய தார்சாலை நான்கு மாதங்களுக்கு முன்னர் போடப்பட்டது. தற்போது போடப்பட்ட புதிய
சாலையின் நடுவே 100 மீட்டர் இடைவெளியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் சாலையை பயன்படுத்தாத நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வு பின் இந்தசாலையை கிராமமக்கள் பயன்படுத்துவதால் சாலையின் நடுவே விரிசலை பார்த்த பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் வரிப்பணம் வீணாகி வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த தரமற்ற சாலையை உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சரி செய்து கொடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.