பாஸ்ட் டேக் 1 பஸ்கள் 2....

24 September 2024

பாஸ்ட் டேக் 1 பஸ்கள் 2....

ஒரே பாஸ்ட்டேக்கில் இயக்கப்பட்ட இரண்டு பேருந்துகள் எந்தவித அவணமும் இன்றி இயக்கப்பட்ட தனியார் சொகுசு பேருந்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

மதுரையில் இருந்து தனியார் சொகுசு பேருந்து ஒன்று 25 பயணிகளை ஏற்றுக் கொண்டு இன்று காலை சென்னைக்கு சென்று கொண்டிருந்தது 
இந்த பேருந்தை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டி சென்றார். இந்த பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் இன்று காலை வந்து கொண்டிருந்த பொழுது அங்கு சுங்க கட்டணம் வசூலிப்பதற்காக பேருந்து நிறுத்தப்பட்டது அப்பொழுது இந்த பேருந்தில் இருந்த பாஸ்ட்ராக் எண் மற்றொரு பேருந்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது இதனால் அதிர்ச்சி அடைந்த சுங்கச்சாவடி ஊழியர் செல்வம் என்பவர் அந்த பேருந்தை நிறுத்தி சுங்கச்சாவடி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார் இதை அடுத்து உடனடியாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது அதன்பேரில் வட்டார போக்குவரத்து அதிகாரி ராஜ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேருந்தின் ஆவணங்களை ஆய்வு செய்த பொழுது அனைத்து ஆவணங்களும் தவறுதலாக இருந்தது தெரியவந்தது ஆர்சி இன்சூரன்ஸ் என எந்தவித ஆவணமும் உரிய முறையில் இல்லாததால் பயணிகளை இறக்க சொல்லி கூறியதோடு பேருந்துதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மதுரையிலிருந்து 900 ரூபாய் பணம் கொடுத்து சென்னைக்கு பயணம் செய்த பயணிகள் பாதி வழியில் இறக்கி விடப்பட்ட நிலையில் பயணிகளுக்கு தலா 200 ரூபாய் வழங்கப்பட்டதால் தனியார் சொகுசு பேருந்து ஓட்டுனர் சுரேஷிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்....

கொற்றவை செய்திகளுக்காக 
இரா.வெங்கடேசன்
சப் எடிட்டர்