தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடிக்கிறது!

03 May 2021

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள் அடிப்படையில் தமிழகத்தில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக தனிப்பெரும்பான்மையுடன் பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடிக்கிறது. சுமார் 150 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று இருக்கிறது.  


எதிர்க்கட்சியாகிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக. அதிமுக கூட்டணி மொத்தம் 75 தெகுதிகள் வரை கைப்பற்றுகிறது. 

இருபது ஆண்டுகளுக்கு பிறகு பாரதிய ஜனதா கட்சி நான்கு உறுப்பினர்களை தமிழக சட்டபன்றத்திற்குள் அனுப்புகிறது. 

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கிட்டத்தட்ட 12 இடங்களை கைபற்றுகிறது. மதிமுக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு தலா 2 இடங்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நான்கு இடங்களில் வெற்றி பெற்றது சட்டசபைக்குள் செல்கிறது