திருவாரூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

12 June 2021


திருவாரூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவதாக காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி திருவாரூர் தண்டலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரைவேலன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் வீரமணி, மாவட்ட மகளிரணி தலைவி அம்பிகா, வட்டார தலைவர்கள் முத்துக்குமார், நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருவாரூர் விளமல் கல் கல்பாலம் பெட்ரோல் பங்க் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் மடப்புரம் சம்பத் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் பாலாஜி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் சுகுமார், மாவட்ட இணை பொதுச்செயலாளர் சம்மந்தம், பிற்படுத்தபட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், நகர துணைத்தலைவர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வுக்கு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

     மன்னார்குடியில் ருக்மணிபாளையம் சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் முன்பு காங்கிரஸ் கட்சியினர் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெடுவை குணசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். . இதில் பொதுக்குழு உறுப்பினர் வடுகநாதன், வட்டார தலைவர் ஜெயபால் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து கோஷமிட்டனர்.

நீடாமங்கலம் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் அசோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்தராஜ், சிறுபான்மை பிரிவு தலைவர் ரஹமத்துல்லா, நகர காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷமிட்டனர்.

முத்துப்பேட்டை புதிய பஸ் நிலையம் பெட்ரோல் பங்க் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் ஜெகபர் அலி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளர் தாஹிர், மாவட்ட அமைப்பு செயலாளர் கோவி.ரங்கசாமி, மாவட்ட செயலாளர் சுந்தரராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மெட்ரோ மாலிக், சிறுபான்மை பிரிவு மாநில நிர்வாகி ஹாஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருத்துறைப்பூண்டி பெட்ரோல் பங்க் முன்பு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகர தலைவர் எழிலரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கச்சனம் பெட்ரோல் பங்க் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கரவடிவேல் தலைமை வகித்தார். இதில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ரமேஷ், நகர செயலாளர் தியாகராஜன், மாவட்ட விவசாய பிரிவு துணைத்தலைவர் கச்சனம் அஜித் மற்றும் பலர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

கூத்தாநல்லூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருவாரூர் மாவட்ட தலைவர் துரைவேலன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் அன்பு வீரமணி, நகர தலைவர் சாம்பசிவம், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சிகாபுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர்கள் பக்கிரிசாமி, சக்திவேல் மற்றும் சிறுபான்மை பிரிவு நகர தலைவர் ரகமத்துல்லா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெட்ரோல்,டீசல்,கியாஸ் விலை உயர்வுக்கு மத்திய பா.ஜ.க.அரசைக் கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இதில் அந்தந்தப் பகுதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

நிருபர் மீனா திருவாரூர்