நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி-க்கள் தர்ணா

22 July 2021


வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலையின் முன்பாக காங்கிரஸ் எம்.பி-க்கள் தர்ணா.


"விவசாயிகளை காப்பாற்றுவோம்", 
"நாட்டைக் காப்பாற்றுவோம்" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி தர்ணாவில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்.பி-க்கள்  

தர்ணாவில் சசி தரூர், அதிரஞ்சன் சவுதரி, மணிஷ் திவாரி, ஜோதிமணி, திருநாவுக்கரசர், கே.சி.வேணுகோபால், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட எம்.பி-க்கள் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தியும் பங்கேற்றுள்ளார்.