வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சி எம் எஸ் 3 செயற்கைகோள்

02 November 2025

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ 1600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன சி எம் எஸ் 03 ஜி சாட் 7 செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் இன்று ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. இந்த ராக்கெட் பல்வேறு கட்டங்களாக பிரிந்து செயற்கை கொலை விண்ணில் நிலை நிறுத்தியது. இந்த செயற்கைக்கோளில் பல்வேறு தொழில்நுட்பங்கள் இடம் பெற்றுள்ளன. இது இந்திய கடற்படை ராணுவத்தின் பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது.