நிதி வழங்குங்கள் - முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

11 May 2021

கொரோனா பெருந்தொற்றால் தமிழகத்தின் நிதி நிலை மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறார். அந்த வேண்டுகோளில், 


முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள் என்றும் பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்‌

மேலும் ரூ.10 லட்சத்திற்கு மேல் நிதியுதவி வழங்குபவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளியிடப்படும் எனவும், https://t.co/OJtTwPkmAW என்ற இணையதளம் வழியாக நிதியை செலுத்தலாம்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சேமிப்புக் கணக்கு எண் - 117201000000010, IFSC - IOBA0001172 என்ற வங்கி கணக்குக்கு நிவாரண நிதியை வழங்கலாம்.

tncmprf@iob என்ற UPI IDஐ பயன்படுத்தியும் கொரோனா நிவாரண நிதியை வழங்கலாம் எனவும்

நன்கொடை செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் எனவும் இதில் திரட்டப்படும் நிதி கொரோனா பாதிப்புக்கு ( ஆக்சிஜன், மருந்துகள்) செலவினங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.