பிரதமர் - ஸ்டாலின் விரைவில் சந்திப்பு !

10 June 2021

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில் பிரதமரை அவர் விரைவில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

 
பிரதமரை சந்திக்க தமிழக அரசின் சார்பில் பிரதமர் அலுவலகத்தில் நேரம் ஒதுக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி வரும் 14, 15, 16 ஆகிய தேதிகளில் ஸ்டாலின் பிரதமரை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது, பிரதமரை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க இருக்கும் தேதி குறித்து பிரதமர் அலுவலக அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது

முதல்வராக பதவியேற்ற பின் முதல் முறையாக டெல்லி சென்று பிரதமரை சந்திக்க உள்ள முதல்வர் ஸ்டாலின், தமிழக நலத் திட்டங்களுக்கான கோரிக்கை மனுவை பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் அளிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் முதல்வரின் டெல்லி பயணத்தின் போது ஜனாதிபதி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது