டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கார் குறித்த பல்வேறு தகவல்களை சேகரித்த போலீசார் கார் நிறுவன உரிமையாளரை தொடர்பு கொண்ட போது அவரது செல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும் காரின் முதல் உரிமையாளர் முகமது சல்மான் என்பவர் அரியானாவில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கார் மற்றொருவருக்கு விற்கப்பட்டு தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் புல்வாமாவை சேர்ந்த அமீர் என்பவருக்கு விற்கப்பட்டு பின்னர் உமர் முகமது என்பவர் இந்த காரை பெற்றுள்ளார். விசாரணையில் திட்டமிட்டு இந்த செயல் நடத்தப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பு தெரிவிக்கின்றது. இருப்பினும் தொடர்ந்து போலீசார் நடத்திவரும் விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது...