பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி

14 November 2025

பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்குகள் தீவிரமாக எண்ணப்பட்டு வரும் நிலையில் இறுதி கட்ட எண்ணிக்கை பணிகள் நெருங்கி உள்ளன. அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணி 207 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்தியா கூட்டணி 35 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையை பெற்றுள்ளது. இதனால் பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.