18 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

25 October 2025

வீடுர் அணை நிரம்பி திறப்பு: 18 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வீடுர் அணை நிரம்பி, 9 மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. சங்கராபரணி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள 18 கிராமங்களுக்கும், புதுச்சேரியின் சில பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வினாடிக்கு 4836 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது, அதே சமயம் 5416 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.