அதிமுக முக்கிய புள்ளிகளுக்கு போட்ட ஸ்கெட்ச் மிஸ்ஸானது!

03 May 2021

தமிழக சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வெற்றிவாகை சூடியுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன். அதன்படி எடப்பாடி தொகுதியில் மீண்டும் களம் இறங்கிய முதலமைச்சர் பழனிச்சாமி 90 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து திமுக சார்பில் களம் இறங்கிய சம்பத்குமார் குறைந்த வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

அதேபோல் போடியில் போட்டியிட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை, 11 ஆயிரத்து 55 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஆனால் இந்த முறை ஓபிஎஸ்ஸுக்கு போடி தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இல்லை என சொல்லப்பட்டது. மேலும் ஓபிஎஸ்ஸை தோற்கடித்தால், அவரை எதிர்த்து போட்டியிட்ட தங்கத்தமிழ்செல்வனுக்கு நிச்சயம் அமைச்சர் பதவி என்று திமுகவில் பேசப்பட்டு வருவதாக சொல்லப்பட்டது.

இருப்பினும் முடிவு எல்லாம் கணிப்புகளை பொய்யாக்கி உள்ளனர். ஓ.பிஎஸ்ஸும் பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளார்.