மியான்மரில் ராணுவ எதிர்ப்புப் போராட்டத்தில் பலி 50-ஐ கடந்தது

04 March 2021

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பலி எண்ணிக்கை 50ஐ கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 38 பேர் பலியான நிலையில் மியான்மர் நிலவரம் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், "மியான்மரில் ராணுவ ஆட்சி தொடங்கியதற்கு எதிராக போராட்டக்காரர்கள் இரண்டு வாரங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதன்கிழமை யாங்கூன் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் ராணுவத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது.அப்போது போராட்டக்காரர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியதில் நேற்று மட்டும் 38 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் 50 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினால் மியான்மர் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்தது.