உளுந்தூர்பேட்டை அருகே 2 மயில்களை வேட்டையாடிய இளைஞர் கைது...

24 January 2023

உளுந்தூர்பேட்டை அருகே 2  மயில்களை வேட்டையாடிய இளைஞர் கைது...

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் எலவனாசூர் கோட்டை காவல் உதவி ஆய்வாளர் திருமால் மற்றும் காவலர்கள் விஜயகுமார், கோவிந்தன், மணிகண்டன் மற்றும் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் எங்கள் துரை ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது புகைப்பட்டி அயன்குஞ்சரம் காப்புகாடு அருகே அதிகாலை  4.30 மணி அளவில் சந்தேகத்திற்கிடமான வகையில்  TN-22 DM 0104 என்ற இருசக்கர வாகனத்தில்  சாக்குப்பையுடன் வேகமாக வந்த இளைஞரை மடக்கி விசாரணை செய்தபோது எறையூர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வின்சென்ட் மகன் பவுல் அமல்ராஜ் வயது 21 என்பதும், அவர் வைத்திருந்த சாக்குப் பையில் இரண்டு பெண் மயில்களை வேட்டையாடி மறைத்து எடுத்து வந்ததையும், அவர் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்து எலவனாசூர் கோட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (நில அபகரிப்பு தடுப்பு பிரிவு) பாலசுப்பிரமணியன் அவர்களின் மேற்பார்வையில் வழக்கு பதிவு செய்து  மேற்படி இளைஞரையும், இருசக்கர வாகனம்,  நாட்டுத்துப்பாக்கி மற்றும் இறந்த 2 பெண்மயில்களையும்  உளுந்தூர்பேட்டை வனத்துறை அலுவலர் ரவி அவர்களிடம் ஒப்படைத்தனர்...

கொற்றவை செய்திகளுக்காக இரா.வெங்கடேசன் மாவட்ட செய்தியாளர் / சப் எடிட்டர்