ரெட் கிராஸ் சங்கம் சார்பில் அரசு பொது மருத்துவமனையில் உலக சுகாதார தினம் விழிப்புணர்வு

07 April 2021


உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் வந்தவாசி கிளை சார்பில் அரசு பொது மருத்துவமனையில் உள்ள தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு பழங்கள், ஹார்லிக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் திருவண்ணாமலை மாவட்ட ரெட்கிராஸ் சங்கத் தலைவர் பா. இந்திரராஜன் அவர்கள் கலந்துகொண்டு உலக சுகாதார தினம் பற்றிய தகவல்களை சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் வந்தவாசி ரெட்கிராஸ் சங்கத் தலைவர் மு. ரமணன் தலைமை வகித்தார். ரெட்கிராஸ் சங்கச் செயலாளர் பா. சீனிவாசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.  நிகழ்வில் அரசு மருத்துவமனையின்  யோகா மருத்துவர் முகமது அர்கம், சித்தா மருத்துவர் இந்திரா,  நர்சிங் மேலாளர் முபாரக் பேகம் ஆகியோர் கலந்துகொண்டு நோயாளிகளுக்கு சுத்தம், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுகளை தெரிவித்தனர். மேலும் இந்த நிகழ்வில் ரெட்கிராஸ் உறுப்பினர்கள் சீ. கேசவராஜ், ம. சுரேஷ் பாபு, மொ. ஷாஜகான், மலர் சாதிக், ஜி. விநாயக மூர்த்தி, வங்கை சு. அகிலன், எம்.பி. வெங்கடேசன், மு. பிரபாகரன், டாக்டர் இரா. பாஸ்கரன், மனோஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர். இறுதியில் டாக்டர் ஏலவார் குழலி நன்றி கூறினார்.