நில ஆக்கிரமைப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

18 October 2021

*நில  ஆக்கிரமைப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா???*

திண்டிவனம் வட்டம், ரெட்டணை மதுரா நாரேரிக்குப்பம் கிராமத்தில் நிலையாக வசித்து வருகிறேன். தற்போது பொதுபணித்துறையின் கீழ் கட்டுப்பாட்டில் ஏரி அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 210 ஏக்கர் நீர்பிடிப்பு பகுதியாக உள்ளது. இதில் பலர் ஆக்கிரமைப்பு செய்துக்கொண்டு 100 ஏக்கர் அளவே நீர் பிடிப்பு பகுதியாக உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமைப்பை அகற்றி தூர்வாரி ஏரியின் முழு கொள்ளளவு நீர் நிரம்ப வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த ஏரிக்கு நீர்வரத்து வாய்க்கால் சுமார் 6 கிலோ மீட்டார் தூரத்தில் இருந்து வருகிறது. வரத்து வாய்க்கால் முழுவதும் ஆக்கிரமைப்பு செய்யப்பட்டும் தூர்வாராமல் சுமார் 20 ஆண்டுகாலமாக உள்ளது. ஆகவே ஐயா அவர்கள் இதன் தக்க நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியின் விவசாய மக்களின் விவசாயத்திற்கு தேவையான நீர் பிடிப்பு அளவு உயர்த்தி விவசாயம் உயர வழிவகை செய்ய தங்களை பணிவன்புடன்
கேட்டுக்கொள்கிறோம்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா???

சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை!