அக்னிபத் திட்டத்தை ஏன் திரும்ப பெற வேண்டும்? இது ஒரு முற்போக்கான நடவடிக்கை - பாதுகாப்புத்துறை

19 June 2022

இந்த சீர்திருத்தம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. இந்த சீர்திருத்தத்தின் மூலம் இளமையையும் அனுபவத்தையும் கொண்டு வர விரும்புகிறோம். புதுடெல்லி, அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் குறிப்பாக வட மாநிலங்களில் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அக்னிபாத் திட்டம் தொடர்பாக ராணுவத்தின் முப்படைகளையும் சேர்ந்த உயர் அதிகாரிகள் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி கூறியதாவது: இந்த சீர்திருத்தம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. இந்த சீர்திருத்தத்தின் மூலம் இளமையையும் அனுபவத்தையும் கொண்டு வர விரும்புகிறோம். இன்று, அதிக எண்ணிக்கையிலான ஜவான்கள் தங்கள் 30 வயதுகளில் உள்ளனர். அதேசமயம் அதிகாரிகள் கடந்த காலத்தை விட மிகவும் தாமதமாக அந்த இடத்தை பெறுகிறார்கள். அக்னிவீரர்கள் சியாச்சின் போன்ற பகுதிகளிலும், தற்போது பணிபுரியும் வழக்கமான ராணுவ வீரர்களுக்குப் பொருந்தும் அதே சலுகையைப் பெறுவார்கள். சேவை நிலைமைகளில் அவர்களுக்கு எதிராக எந்த பாகுபாடும் இல்லை. ஆயுதப்படைகள் இளமையையும் அனுபவத்தையும் கொண்டு வர விரும்புகிறோம். அக்னிபத் திட்டத்தை ஏன் திரும்ப பெற வேண்டும். இது ஒரு முற்போக்கான நடவடிக்கை" என்றார்.