ஏன் பூஜை அறையில் தண்ணீர் வைக்க வேண்டும்

15 October 2020

பொதுவாக பூஜை அறைகளில் பஞ்சபாத்திரத்தில் அல்லது டம்ளர்களிலோ தண்ணீரை நிரப்பி வைத்திருப்பது வழக்கம். இதற்கான காரணத்தை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


நாம் வழிபடும் போது நம்முடைய இஷ்ட தெய்வத்தின் பாடல்கள், துதிகள், மந்திரங்கள் சொல்வது நடைமுறை. அவற்றிற்கான அதிர்வலைகள் அந்த தண்ணீரில் இறங்குகின்றன.

அதன் பிறகு நாம் அந்த தண்ணீரை அருந்துவதால் சிறப்பான நன்மைகள் உருவாகும் என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.

இதுவரை செய்யாதவர்கள் இனி தொடர்ந்து செய்யலாம். ஒவ்வொரு நாள் பூஜையின்போதும் சிறிய பாத்திரத்தில் நீர் நிரப்பி வைத்த பின்னர் அன்றைய பூஜையை செய்யலாம். அடுத்த நாள் அந்த தண்ணீரை செடிகளுக்கு ஊற்றி விட்டு வேறு புதிய நீர் நிரப்பி அதே இடத்தில் வைக்கலாம். இதனைத் தொடர்ந்து செய்து வருவதால் வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் பெருகும்.

பூஜையின்போது ஐம்பூதங்களான ஆகாயம், நிலம், நெருப்பு, காற்று ,நீர் இவைகளை வழிபடுவதற்காகவும் தண்ணீர் வைக்கப்படுகிறது.

வெட்ட வெளியான ஆகாயமும், நம்மை தாங்கி நிற்கும் தரையாக நிலமும், பூஜை அறையில் ஏற்றும் தீபத்தில் நெருப்பும், தீபம் எரிவதற்காக வியாபித்திருக்கும் காற்றும் உள்ளன. மீதமிருக்கும் தண்ணீரையும் பூஜை அறையில் வைத்து வழிபடுகிறோம். இதனால் ஐம்பூதங்களும் நம் பிரார்த்தனை நிறைவேற சகாயம் செய்யும் என்பதும் ஐதீகம்.