சினோபார்மை அவசர கால தடுப்பூசியாக பயண்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி

09 May 2021

சீனாவின் கொரோனா தடுப்பூசியான சினோபார்மை, அவசர தேவைகளுக்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு அனுமதி அளித்துள்ளது.


 சினோபார்மை அவசர கால தடுப்பூசியாக பயண்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதிஉலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15.75 கோடியாக அதிகரித்துள்ளது. 

மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3,283,708 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 134,954,947 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 19,292,074 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், பைஸர், மாடர்னா, ஸ்புட்னிக், கோவாக்சின், அஸ்ட்ராஜெனகா ஆகிய தடுப்பூசிகளுக்கு ஏற்கெனவே உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கி அவை பயன்பாட்டில் உள்ள நிலையில் சீனா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியான சினோபார்மை, அவசரத் தேவைகளுக்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

சீனாவின் இந்த சினோபார்ம் தடுப்பூசியானது இலங்கை, அமீரகம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.