திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள்? - இன்று பேச்சுவார்த்தை

08 March 2021

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தையடுத்து, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

இதனால் தமிழக அரசியல் களம் உச்சபட்ச பரபரப்பில் உள்ளது.திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் குழு இந்த ஆலோசனையில் பங்கேற்க உள்ளது. 9 விருப்ப தொகுதிகளை அளித்து அதில் 6 தொகுதிகளை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.