திரையரங்கில் தான் படத்தை வெளியிடுவோம்

05 September 2021

தலைவி திரைப்படத்தை ஓ.டி.டியில் நேரடியாக வெளியிட பல நிறுவனங்கள் முன்வந்தபோதும், திரையரங்கில் தான் படத்தை வெளியிடுவோம் என காத்திருந்ததாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தழுவி எடுக்கப்பட்டுள்ள தலைவி திரைப்படம் கடந்த ஆண்டே வெளியீட்டுக்கு தயாரானது. ஆனால் இரண்டு ஊரடங்குகளால் சரியான வெளியீட்டு தேதி கிடைக்காமல் படக்குழுவினர் காத்திருந்தனர். அந்த சமயத்தில் பல்வேறு ஓ.டி.டி நிறுவனங்கள் தலைவி திரைப்படத்தை நேரடியாக தங்களின் தளத்தில் நேரடியாக வெளியிட முன்வந்ததாக தயாரிப்பாளர் தெரிவித்தார். ஆனால் திரையரங்கில்தான் இந்த திரைப்படத்தை வெளியிட வேண்டுமென்று, அந்த வாய்ப்புகள் அனைத்தையும் நிராகரித்து விட்டதாகவும் அவர் கூறினார். 

இரண்டாவது ஊரடங்கில்  தளர்வுகள் வழங்கப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால், வரும் 10-ம் தேதி தலைவி திரைப்படம் திரை அரங்கில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.