பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக விசிக போராட்டம் தஞ்சையில் பரபரப்பு

27 October 2020

தஞ்சையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்களை கைது செய்ய வலியுறுத்தி பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் போராட வந்ததால் பரபரப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருமாவளவனை கைது செய்ய வலியுறுத்தி பாஜக மகளிரணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது விடுதலை சிறுத்தை கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலமாக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் செய்துவந்தனர்.

காவல்துறையினர் உடனடியாக சென்று அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர் பாஜக போராட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஊர்வலம் வந்தது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.