விளாத்திகுளம், ரெகுராமபுரம் சந்தியம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலத்தை, வி.ஏ.ஓ. துணையுடன் தனிநபர்கள் அபகரிப்பு?

19 October 2021

விளாத்திகுளம், ரெகுராமபுரம் சந்தியம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலத்தை, வி.ஏ.ஓ. துணையுடன் தனிநபர்கள் அபகரிப்பு?

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் வௌவால் தொத்தி  ஊராட்சி ரெகுராமபுரம் கிராமத்தில் ஶ்ரீ சந்தியம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட 20 சென்ட் நிலம் விஏஓ துணையுடன் தனிநபர்கள் அபகரிப்பு.

 வௌவால் தொத்தி  ஊராட்சி ரெகுராமபுரம் கிராமத்தினர் தலைவர் அழகர்சாமி தலைமையில் இன்று  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்தனர்; இது குறித்து திமுக் மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன் தெரிவிக்கையில்; ரெகுராமபுரம் ஶ்ரீ சந்தியம்மன் கோவிலுக்கு எதிரில் உள்ள நிலத்தை கோவில் திருவிழா நாட்கள் மற்றும் விழாக்காலங்களில் எங்கள் மக்கள் 300 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். இப்பொழுது மேற்ப்படி நிலத்தை வௌவால் தொத்தி கிராம நிர்வாக அதிகாரியும், கிராம உதவியாளரும் சேர்ந்து தனி நபர்கள் மூன்று பேருக்கும் முறைகேடாக பட்டா வழங்கியுள்ளனர். இதற்காக பல லட்சங்கள் கைமாறியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் முறைகேடாக பட்டா வாங்கிய மூன்றுமேரும் பிரச்சனைக்குறிய இடத்தில் கற்களை நட்டி எங்கள் மக்கள் பயன்படுத்த தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் இரு சமுகத்தவர்களிடம் பகையை தூண்டிவிடுவதாகவும் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக திமுக் மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன் தெரிவித்தார், எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதில்  தலையிட்டு பிரச்சனைக்குறிய நிலத்தை மீட்டு மீண்டும் ரெகுராமபுரம் ஶ்ரீ சந்தியம்மன் கோவிலுக்கு ஒதுக்கி தரவேண்டுமென தெரிவித்தனர். நிகழ்வின் போது ரெகுராமபுரம் திமுக திர்வாகிகள் மாரிமுத்து, வேல்முருகன், குருசாமி, கருப்பசாமி, திமுக இளைஞரணி ரத்சானமி, அரசகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.