விக்ரமின் நடித்த ‘கோப்ரா' படம் ஓ.டி.டி.யில் ரிலீசா?

12 April 2021

சூர்யாவின் சூரரை போற்று, ஜெயம் ரவியின் பூமி. விஜய்சேதுபதி நடித்துள்ள க.பெ.ரணசிங்கம், மாதவனின் சைலன்ஸ், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், கீர்த்தி சுரேசின் பென்குயின், யோகிபாபுவின் மண்டேலா உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டி தளங்களில் வெளிவந்தன. திரிஷா நடித்துள்ள பரம பதம் விளையாட்டு படமும் ஓ.டி.டியில் வருகிறது. இந்த நிலையில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படமும் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளாகவும் இந்த படத்தை ஓ.டி.டி தளம் பெரிய விலை கொடுத்து வாங்கி இருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இது தியேட்டர் அதிபர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இந்த தகவல் உண்மை அல்ல என்று கோப்ரா பட நிறுவனம் மறுத்துள்ளது. கோப்ரா படம் தியேட்டரில் வெளியாகுமா அல்லது ஓ.டி.டியில் வருமா என்பது சில வாரங்களுக்கு பிறகே தெரிய வரும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார். ஶ்ரீநிதி ஷெட்டி நாயகியாக வருகிறார்.