முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் உறவினர் மீது குற்றச்சாட்டு !

20 February 2021

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் உறவினர் மீது குற்றச்சாட்டு !

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவருக்கு வினோத் குமார் என்ற மகன் உள்ளார் புதூர் வடக்குத் தெருவில்  முன்னாள் அமைச்சர்  வைத்திலிங்கத்தின் உறவினர் குணசேகரன்  என்பவர் வசித்து வருகிறார் இந்நிலையில் குணசேகரன்  என்பவருக்கும் கோவிந்தராஜ் குடும்பத்தினருக்கும் இடப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி கோவிந்தராஜ் மகன் வினோத்குமாரை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அடித்து அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது இதனையடுத்து ஆறாம் தேதி வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார் இதுகுறித்து கோவிந்தராஜ் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தனது மகனின் தற்கொலைக்கு   தூண்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்  என்று  தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  புகார் மனு அளித்தனர் காவல் துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் தங்களது பகுதி பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்