மாநிலங்களுக்கு நாளொன்றுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது: மத்திய அரசு

21 July 2021


மாநிலங்களுக்கு நாளொன்றுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டேவியா தெரிவித்துள்ளார்.


கொரோனா நிலவரம் தொடர்பாக, மாநிலங்களவையில் பதிலளித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டேவியா, மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார். நாளொன்றுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறினார்.

கொரோனா தடுப்பூசி
இந்தியாவுக்கு தடுப்பூசிகள் வழங்க பல வெளிநாட்டு நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

ஸ்புட்னிக் தடுப்பூசி இந்தியாவில் வெளிச்சந்தையில் விற்பனைக்கு வந்துவிட்டதாகவும், குழந்தைகளுக்கான கொரோனா பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். கொரோனா 3வது அலையில், குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுவதால், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மான்சுக் மாண்டேவியா தெரிவித்தார்.