இந்தியா-பிரேசில் இடையே தடுப்பூசி ஒப்பந்தம் ரத்து!

24 July 2021


பிரேசில் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் மேற்கொண்ட தடுப்பூசி ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக கூறப்பட்ட நிலையில் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பிரேசில் இரண்டு மருந்து நிறுவனங்கள் மூலமாக பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகளை 2 கோடி டோஸ் வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது.

இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தில் பிரேசில் அதிபர் முறைகேடு செய்ததாக பிரேசில் எதிர்கட்சிகள் பிரச்சினையை கிளப்பியுள்ளன. இந்நிலையில் பிரேசில் மருந்து நிறுவனங்கள் மூலமாக தடுப்பூசி விநியோகத்திற்கான ஒப்பந்தத்தை பாரத் பயோடெக் ரத்து செய்துள்ளது. ஆனால் நேரடியாக பிரேசில் அரசு மூலமாக தடுப்பூசி விநியோகிக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.