பெண்களை வாட்டும் சிறுநீர் கசிவு பிரச்சனை:

24 October 2020

பெண்களை வாட்டும் சிறுநீர் கசிவு பிரச்சனை:

வீட்டு வேலை செய்யும் பெண்களைக் காட்டிலும், வெளியில் பணிபுரியும் பெண்கள் தான் அதிகமாக இந்த பிரச்சினையை சந்தித்து வருகின்றார்கள். இதனால் மனரீதியில், உடல் ரீதியில் பாதிக்கப்படுகின்றனர்.

இதிலிருந்து விடுபட என்ன செய்யலாம் என இங்கு பார்ப்போம்.

#யாருக்கு_எல்லாம்_வரலாம்?

நிரந்தரமாக தளர்ச்சிக்கு உள்ளானவர்கள் தும்மினால், வேகமாக அதிர்ந்து நடந்தால், படிகள் இறங்கினால், சிரித்தால் சிறுநீர் கசிவு ஏற்படும்.

அதிகம் குழந்தை பெற்ற பெண்மணிகளுக்கும் இந்தப் பிரச்சினை வரலாம்.

உடல் பருமன் ஆனவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு வரலாம்.

#அதற்கு_என்ன_செய்யலாம்?

◆நிறைய தண்ணீர் குடித்து வாருங்கள்.
◆இளநீர் குடிப்பது பல சிறுநீரக பாதிப்புகளை போக்கும்.
◆சிறுநீர் கழிக்கையில் வலி உண்டானால் பரங்கிக்காய் சாற்றை குடிக்கவும்.
◆தினசரி 2 அத்திப்பழங்களை 10 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு குடிக்கவும்.
◆குறைவாக சிறுநீர் போனால் உலர்ந்த திராட்சை ஜுஸ் குடிக்கவும்.
◆அதிக சிறுநீர் போவதை தேன் கட்டுப்படுத்தும்