கூலி தொழிலாளிக்கு ஒன்பது லட்சம் வருமானம் என வருமானச் சான்று வழங்கிய உளுந்தூர்பேட்டைவருவாய்த்துறை தொழிலாளி பரிதவிப்பு..!!!

26 August 2022

கூலி தொழிலாளிக்கு ஒன்பது லட்சம் வருமானம் என வருமானச் சான்று வழங்கிய உளுந்தூர்பேட்டைவருவாய்த்துறை
தொழிலாளி பரிதவிப்பு..!!!

உளுந்தூர்பேட்டை, ஆக, 26-

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பாலி புது காலனி கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் வெங்கடேசன் வயது:45 கூலித் தொழிலாளியான இவர் உளுந்தூர்பேட்டையில் தனியார் ஓட்டலில் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார் இந்த நிலையில் கடன் உதவி பெறுவதற்காக வருமான சான்றிதழ் வேண்டி உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்தார், இதன் அடிப்படையில்  இவருக்கு வழங்கப்பட்ட வருமான சான்றிதழில் ஆண்டு வருமானம் ரூபாய் 90 ஆயிரத்திற்கு பதிலாக ரூ. 9 லட்சம் என வருமான சான்றிதழ் வழங்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார் மேலும்   கடனுதவி பெற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.  இது மட்டுமின்றி மீண்டும் பதிவு செய்து வேறு வருமான சான்றிதழும் பெற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதால் மன உளைச்சலுக்கு ஆளான ஹோட்டல் கூலி தொழிலாளி வெங்கடேசன் அதிகாரிகளின் அலட்சியத்தால் தற்போது வருமான சான்று கிடைக்காமல்  அல்லல் பட்டு அலைந்து வருகின்றார் இந்த செய்தி  சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டிருப்பதால் இதனை கண்ட சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்து அச்சத்தில் உள்ளனர் அரசு அலுவலர்களின் இந்த அலட்சியப் போக்கே கூலித்தொழிலாளியின் மன உளைச்சலுக்கும், லோன் கிடைக்காமல் போனதற்கும் காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் இதனால் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில்  அப்பொழுது சான்றிதழ் பதிவு செய்ய வந்த பொதுமக்களும் அச்சமடைந்து சான்றிதழ்களுக்கு பதிவு செய்யாமல்  திரும்பிச் சென்றதால் அங்பகு பரபரப்பு ஏற்பட்டது.

கொற்றவை செய்திகளுக்காக
இரா.வெங்கடேசன்
சப்எடிட்டர்