மஞ்சளை எல்லாவற்றிலும் சிறந்த கிருமித் தொற்று நீக்கி எனக் கருதுவது சரியா?

31 January 2021

கேள்வி: மக்கள் இன்றைய நாள்களில் தொற்று நீக்கியாக  மஞ்சளைப் பயன்படுத்த முனைகின்றார்கள். மஞ்சளை எல்லாவற்றிலும் சிறந்த கிருமித் தொற்று நீக்கி எனக் கருதுவது சரியா?
(த.பிரேமிலன், கிளிநொச்சி)

பதில்: எம்மவர்களின் செயல்கள், செயற்பாடுகளில் மஞ்சள் என்பது மனதோடு கலந்த விடயம். ஒரு விடயத்தைச் செய்யும்போது ஏன் செய்கிறோம்? எதற்குச் செய்கிறோம்? எப்படிச் செய்கிறோம் ? என்று ஆராய்ந்தாலே  பல சிக்கல்கள் தீர்ந்துவிடும்.  மஞ்சளுக்கு வைரசுகளைக் கொல்லும் ஆற்றல் அறவே இல்லை. அதுவும் இங்கே உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கெதிராக போராடும் ஆற்றல் மஞ்சளுக்குக் கிடையாது என்பதே அறிவியல் உண்மை.
மஞ்சளுக்கு பக்ரிறீயாக்களைக் கொல்லும் ஆற்றல் மட்டுமே உண்டு. அதற்கும் அதனை சரியான விகிதாசாரத்தில்  கலந்து பயன்படுத்தினால்  மட்டுமே பயனுண்டு. 
மஞ்சளை உட்கொள்வதால் உட் காயங்களுக்கு எதிரான பாதுகாப்பு கிடைப்பது உண்மை. anti offammatory effectஎன்று அதனைக் கூறுவோம். ஆனால் அதை வெளிப்புற கிருமி நீக்கத்துக்கு (antiseptic effect) பயன்படுத்தும்போது வைரசுகளை அவை கொன்று பாதுகாப்பளிக்கும் என்று எந்த ஆய்வு முடிவுகளும் இதுவரை  இல்லை.

Written By Dr. Priyaa Kamalasingam
DGH Chilaw, TH Jaffna , Srilanka