உளுந்தூர்பேட்டை வனவியில் விரிவாக்க மையத்தில் திருச்சி தோட்டக்கலை மாணவிகள் ஊரகத் தோட்டக்கலை பணி குறித்து ஆய்வு...

23 January 2023

உளுந்தூர்பேட்டை வனவியில் விரிவாக்க மையத்தில் திருச்சி தோட்டக்கலை மாணவிகள் ஊரகத் தோட்டக்கலை பணி குறித்து  ஆய்வு...

உளுந்தூர்பேட்டை ஜன-23

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் திருச்சி மகளிர்  தோட்டகலைக்  கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இறுதி ஆண்டு மாணவிகள் குழு ஊரக தோட்டக்கலை பணி அனுபவமாக உளுந்தூர்பேட்டையில் உள்ள வனவியல் விரிவாக்க மையத்திற்கு வருகை புரிந்தனர், இங்கு மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் மரக்கன்றுகள், பயிற்சிகள், திட்டங்கள் குறித்து வனச்சரக அலுவலர் கே.முருகானந்தம், ரவி ஆகியோர் மாணவிகளுக்கு விளக்கினார்கள், பின்பு அங்குள்ள நாற்றங்கால் பகுதியை பார்வையிட்டு நாற்றாங்காலில் உள்ள செடிகளை குறித்து கேட்டறிந்து பின்னர் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள பெரியார் நகரில் தன்னார்வலர் பசுமை நாயகன் க.குணசேகரன் அவர்களால் உருவாக்கி பராமரிக்கப்பட்டு வரும் எழில் வனத்தை பார்வையிட்டு அவரின் திட்ட அனுபவம் குறித்து கேட்டறிந்தனர் வருகை புரிந்த தோட்டக்கலை கல்லூரி மாணவிகளுக்கு தன்னார்வலர் குணசேகரன் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்... 

கொற்றவை செய்திகளுக்காக 
இரா.வெங்கடேசன் மாவட்ட செய்தியாளர் / சப்எடிட்டர்