இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும்...

21 March 2022

இன்றைய எண் கணித பலன்கள்

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும் மற்றும் உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்.
புரொஃபஷனலாக இருந்தாலும் சரி அல்லது ஊழியர்களாக பணிபுரிந்தாலும் இருந்தாலும் சரி, உங்கள் பார்த்னர்களைக் கவர்வதன் மூலம் உங்கள் கனவுகளை நிறைவேற்றலாம்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை
அதிர்ஷ்ட நாள் - ஞாயிறு
அதிர்ஷ்ட எண்கள் - 1 மற்றும் 3
தானம் - மஞ்சள் நிற வஸ்திரத்தை தானமாக வழங்கலாம்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் கடந்த கால சாதனைகள் அனைத்தையும் நினைத்து பார்த்து மகிழ்வீர்கள். உங்களுக்கான சிறந்த நெட்வொர்க்கை உருவாக்குவதற்கான அதிக வாய்ப்பு தற்போது உள்ளது. எனவே, பொது விழாக்களில், கூட்டங்களில் தவறாமல் சமூகக் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்
அதிர்ஷ்ட நாள் - திங்கள்
அதிர்ஷ்ட எண்கள் - 2 மற்றும் 7
தானம் - யாசகர்கள் மற்றும் கால்நடைக்கு அரிசியை தானமாக வழங்கலாம்

#எண் 3 ( நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்) :

தானம் செய்வதற்கும் உங்கள் குருவின் ஆசிகளைப் பெறுவதற்கும் இன்று உகந்த நாள். இன்று ஏராளமான பண வரவும், லாபமும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நிறம் - ஊதா
அதிர்ஷ்ட நாள் - வியாழன்
அதிர்ஷ்ட எண்கள் - 9
தானம் - பெண்களுக்கு குங்குமம் வழங்கலாம்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் ஆடம்பரத்தையும், ஷாப்பிங்கையும் அனுபவிப்பீர்கள். அதே நேரத்தில், வணிக ரீதியான பேச்சுவார்த்தைகளில் உங்கள் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஊதா
அதிர்ஷ்ட நாள் - புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண்கள் - 5 மற்றும் 3
தானம் - ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை தானமாக வழங்கலாம்

#எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சட்ட ரீதியான பிரச்சனைகள் உட்பட, ஏற்கனவே இருக்கும் தகராறுகளை தீர்க்க சிறந்த நாள். திருமணத்துக்கான ப்ரப்போசல்களை பெற்றுக்கொள்ளலாம் அல்லது மேற்கொள்ளலாம்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்
அதிர்ஷ்ட நாள் - புதன்கிழமை
அதிர்ஷ்ட எண்கள் - 5 மற்றும் 6
தானம் - குழந்தைகளுக்கு திரவங்களை தானமாக வழங்கலாம்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

இன்று வணிக ஒப்பந்தங்கள் மற்றும் சட்ட ரீதியான முடிவுகளில் தாமதம் ஏற்படும். ஆனால் இந்த தேதியில் பிறந்த பெண்களுக்கு இன்று ஓய்வு கிடைக்கும். அது மட்டுமின்றி, குடும்பத்தில் அவர்களுக்கு மரியாதை கிடைத்திருக்கும், அதற்கும் தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மிகவும் நன்றியுடன் இருப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - பீச்
அதிர்ஷ்ட நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - நீல நிறத்துணியை தானமாக வழங்கலாம்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று வியாபாரத்தில் ரிஸ்க் எடுக்க நீங்கள் தயாராக இருந்தால், அதை பொறுமையாகக் கையாள வேண்டும். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் முதிர்ச்சியான நபராக செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
அதிர்ஷ்ட நாள் - திங்கட்கிழமை
அதிர்ஷ்ட எண்கள் - 7 மற்றும் 6
தானம் - கோவிலுக்கு பால் தானம் செய்யலாம்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்கள் சக போட்டியாளர்களுடன் மிகவும் கவனமாக இருங்கள். ஏதோ ஒரு ஏமாற்று வேலை அல்லது சதி உங்களைச் சுற்றி காத்திருப்பதால், நீங்கள் இன்று அதிகாரப்பூர்வமான அல்லது சட்ட ஆவணங்களில் கையெழுத்திட வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை
அதிர்ஷ்ட நாள் - சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - பச்சை நிற கீரைகள், இலை தழைகளை கால்நடைகளுக்கு வழங்கலாம்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இந்த தினம் ஆன்மீகம் மற்றும் தன்னைத் தானே அறிந்து கொள்ளும் முயற்சிக்கு ஏற்றது. உங்கள் குழப்பமான மனநிலையிலிருந்து வெளியே வர, உங்களுக்கு உதவக்கூடிய, ஒரு பழைய வழிகாட்டியை சந்திக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்ட நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - சிவப்பு நிற முள்ளங்கி மற்றும் அதை கீரையை தேவைப்படுபவருக்கு தானமாக வழங்கலாம்