ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மீண்டும் கால அவகாசம்!

23 July 2021


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்மமான மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகச்சாமி ஆணையத்திற்கு ஏற்கனவே 10 முறை கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது 11வது முறையாக கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

 
கடந்த சில ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த ஆண்டிற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து இந்த ஆணையத்திற்கு மேலும் ஆறு மாத காலம் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இந்த ஆறு மாத காலத்திற்கு உள்ளாகவே விசாரணையை ஆறுமுகசாமி கமிஷன் முடிவு எடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்புமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு மரணம் அடைந்த நிலையில் அவரது மரணம் குறித்து விசாரிக்க கடந்த அதிமுக ஆட்சியில் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.