பறக்கும் புகார்கள்.. ரெடியாகும் போலீஸ்

11 December 2021

கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் ஜிபி முத்து, ரவுடி பேபி சூர்யா. ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக போலீசில் புகார்.

என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா நண்பிகளே அப்டிங்குறது தளபதி விஜயோட ஓபனிங் டயலாக். என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே அப்டின்னா அது மறைந்த கலைஞர் அவர்களோட ஓபனிங் டயலாக். மக்களால் நான் மக்களுக்காக நான், அப்டின்னா அது மறைந்த ஜெயலலிதா அவர்களோட ஓபனிங் டயலாக்.இந்தமாதிரி சமுதாயத்துல பெருசா சாதிச்சவங்க பேசுற முதல் ஓபனிங் டயலாக்குகள எல்லாம் பின்னுக்கு தள்ளியவர் இவர்.ஒரே ஒரு ஆண்ட்ராய்டு போன், ஒரு ஹெட் செட் வச்சுக்கிட்டு, முண்டா பணியன போட்டுகிட்டு வணக்கம் மக்களே அப்டின்னு இவர் ஸ்டார்ட் பன்ற வீடியோ தான் இப்போ சமூக வலைத்தலங்கள செம ஹிட்.யார பத்தி சொல்ல வரேன்னு புருஞ்சுருக்கும்னு நினைக்கிறேன். தச்சரா இருந்தவரு தன்னோட வாழ்க்கை கஷ்டத்த மறக்கனும்னு பொழுது போக்குக்காக டிக்டாக்-ல எல்லார மாறியும் சினிமா பாடல்களுக்கு முக பாவனைகளை செஞ்சு செம கலாய் வாங்குனவரு தான் கணேசன் பேச்சமுத்து நம்ம எல்லாருக்கு தெரியுர மாதிரி சொல்லனும்னா ஜிபி முத்து.டிக்டாக்-ல குறைந்த நாட்களயே அதிக பேரை திரும்பி பார்க்க வச்ச ஜிபி முத்துவுக்கு, டிக்டாக்-ல கிடைச்ச அரிய பொக்கிஷம் தான் ரவுடி பேபி சூர்யா. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பன்னுர டூயட்டுக்கு லைக்ஸ் சும்மா பிச்சுக்கும்.இப்டி ஜாலியா போயிட்டு இருந்த ஜிபி முத்துவோட வாழ்க்கையில வச்சாம்பாரு ஆப்பு அப்டிங்குற நித்யானந்ததோட டயலாக்குக்கு ஏத்த மாறி, இந்தியா, சீன செயலியான டிக்டாகுக்கு தடை விதிச்சது. அப்றம் ஒரு தனியார் சேனல வேலை செய்ற வாய்ப்பு கிடைச்சாலும், குடும்பத்த நடத்துறதுல ஏற்பட்ட சிக்கலால, என்னடா பன்றதுன்னு ஒன்னும் புரியாம இருந்த ஜிபி முத்துவுக்கு கைக் கொடுத்த அவரோட நண்பர், யூடியூப் சேனல் ஒன்ன ஆரம்பிச்சாரு.3ங் கிளாஸ் படுச்ச ஒரு மனுசன் சாதாரண தச்சரா சராசரி குடும்ப வாழ்க்கையில இருந்தவரு, கொரோனா காலகட்டத்துல தொழில ஏற்பட்ட நஷ்டத்தால, தற்கொலை செஞ்சுக்க முயற்சி பன்னினவருக்கு, கடவுள் அடிச்சாம் பாருங்க அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டரு.யூடியூப்-ல ஒருத்தர் பெரிய ஆளாகுறதுங்குறது சும்மா இல்ல. பல வருஷமா யோசிச்சு மண்டய உடைச்சு கண்டண்ட் போடுறவங்களுக்கே சப்ஸ்கிரைபர்ஸ் வரது கஷ்டமா இருக்ற நேரத்துரல, சேனல் ஸ்டார்ட் பன்ன 4 மாசத்துலயே 7 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் கிடைச்ச சந்தோஷத்துல மனுசன் லைஃப் டாப் கியருல போக ஆரம்பிச்சது. 2020-வரைக்கும் ஒன்னுமே இல்லாம இருந்த மனுசன், யூடியூப் சேனல் மூலமா வீடியோ போட்டு உலகம் பூறா தெருஞ்சது மட்டுமல்லாம, 2021-ல ஒரு ஹுண்டாய் கார் வாங்கி அசத்துனாறு..தனக்கு வரக் கூடிய பேட் கமண்ட், மற்றும் லெட்டர்ஸ்-க்கு ரிப்ளே கொடுக்குறது தான் இப்போ இவரோட வேல.. செத்த பயலே, நாரப்பயலே அப்டின்னு நெல்லை பாஷைல இவரு திட்டுறத கேக்காம தூக்கமே வரமாட்டிங்குதுபா அப்டின்னு இருக்குற ரசிகர்களும் இருக்காங்க.இப்படி படிபடியா லைஃப்-ல செட்டில் ஆகிட்டு இருக்குற மனுசனுக்கு இன்னொரு இடி வந்து விழுந்துருக்கு. ராமநாதபுரத்தை சேர்ந்த எம்.எம்.கே.முகைதீன் அப்டிங்குறவரு, ஜிபிமுத்து, ரவுடி பேபி சூர்யா-ன்னு சேத்து 4 பேர் மேல ராமநாதபுர மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கிட்ட ஒரு புகார கொடுத்துருக்காரு. இவங்களோட முக பாவணைகளும், பேச்சுகளும் தமிழ்நாட்டு கலாச்சார சீரழிவ ஏற்படுத்துன்னும், இதை பாக்குற சிறுவர், சிறுமிகளோட எதிர்காலம் மிகவும் பாதிக்கப்படும்ன்னு அந்த புகார்ல சொல்லிருக்காரு. இளைய சமுதாயத்த பாதிக்குற இது மாதிரியான இணையதளவாசிகளின் சேனல்களை தடை செய்யனும்னு ரொம்ப காட்டமா புகார் கொடுத்துருக்காரு. இதுனால ஜிபிமுத்து, ரவுடிபேபி சூர்யா, திருச்சி சாதனா, சிக்கா என்ற சிக்கந்தர் ஆகியோருக்கு சிக்கல் எழுந்துருக்கு. என்னதான் ஒரு பக்கம் இவங்களோட வீடியோக்கள பாக்கும் போது நமக்கு எண்டர்டெய்ன்மெண்ட் இருந்தாலும், இன்னொரு பக்கம் பாக்கும் போது, இந்த புகார்ல சொல்லி இருக்குறதும் உண்மைதான்னு தோனுது. புள்ளைங்க கெட்டு போயிடுவாங்கன்ன்னு நம்ம பெற்றோர்களா குழந்தைங்க முன்னாடி சண்டை போட மாட்டாங்க, கெட்ட வார்த்தைகள் பேச மாட்டாங்க. ஆனா ஜிபி முத்து, ரவுடி பேபி உள்ளிட்ட சிலர் சமூக வலைத்தலங்கள, இதபத்திலாம் கவலப் படாம சகட்டு மேனிக்கு கெட்ட வார்த்தைள பேசி தள்ளுறதால கண்டிப்பா மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பும் இருக்கு. மேலும் பிராங் என்ற பெயரில் இவர்கள் அத்துமீறக்கூடிய செயல்கள் ரசிக்கும்படியாக இல்லை.கண்டிக்கத்தக்கதாக தான் இருக்கிறது.இவர்கள் செய்வதை சமூக சீர்கேடு என்று நினைக்காமல் ஊரு உலகத்துல நடக்குறத போய் கேட்காம, நாங்க என்னமோ கொலை குத்தம் செய்த மாதிரி எங்கள கேக்குறீங்க என்று,அவர்களின் செயலை நியாயபடுத்தி பேசுவார்கள். இவர்கள் மீதான புகார் எந்த அளவுக்கு போது, ஒருவேள இணையங்கள வீடியோ பதிவிட நெறிமுறைகள் வகுக்கப்படுமா? அப்டிங்குறத நாம பொருத்து இருந்துதான் பாக்கனும்.