வைகாசி அமாவாசை திருக்கல்யாண வைபவம்!

10 June 2021


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி விசாகம் அமாவாசை முன்னிட்டும், உலகையே அச்சுறுத்தும் கொடிய வைரஸ் நோயிலிருந்து உலக மக்கள் விடுபடவும், அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. மந்திரங்கள் முழங்க, சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடந்தேறியது. மேலும் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. சக்தி உபாசகர் ஆறு. லட்சுமணன் ஸ்வாமிகள் முன்னிலையில் இவ்வைபவம் நடைபெற்றது. பக்தர்கள் இன்றி கோவில் உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்த திருக்கல்யாண வைபவத்தை வைகாசி மாத திருக்கல்யாண குழு ஒருங்கிணைத்து செயல்படுத்தினர்.