மகளிர் சுய உதவிக் குழுவினரை தேர்தல் பணிக்கு அரசு எந்திரத்தை பயன்படுத்தும் போக்கு உடனடியாக தடுக்கப்பட வேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வேண்டுகோள்

30 November 2020

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது ஆளும்கட்சிக்கு ஆதரவாக மகளிர் சுய உதவிக் குழுவினரை தேர்தல் பணிக்கு அரசு எந்திரத்தை பயன்படுத்தும் போக்கு உடனடியாக தடுக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

மதுரை மாவட்டத்திலுள்ள மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பணிகளுக்கு தயார் செய்யும் வகையில் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிகள் பெருவாரியாக தலா 25 பெண்கள் கொண்ட பெயர் பட்டியல் அவர்களது கைபேசி எண்ணுடன் கூடிய பட்டியலை தயார் செய்து தர வேண்டும் என பொறுப்பாளர்கள் வற்புறுத்தி வருவதாகவும் அதற்கான பொறுப்பாளர் கூட்டம் இன்று நடத்தியதாகவும் ஆளுங்கட்சியின் தேர்தல் பணிகளுக்காக அரசு விதிமுறைகளை அப்பட்டமாக மீறி அரசு நிர்வாகத்தை பயன்படுத்தியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் அவர்கள் திட்ட அலுவலர் செயல்பாடு குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

விவசாயிகள் போராட்டம் மத்திய அரசு இறங்கி வரவில்லையே?

இந்தி, சமஸ்கிருத திணிப்பு அரசு பொறுபேற்ற பிறகு இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளது. தமிழகம், புதுச்சேரி சமஸ்கிருத திணிப்பு காந்தி கிராம பல்கலையை விட்டு விட்டு மற்ற 3
சமஸ்கிருத பல்கலைகழகங்கள் தரம் உயர்த்தி உள்ளது. சமஸ்கிருத மொழியில் தொலைக்காட்சியில் 15நிமிடம் செய்தி சுற்றறிக்கை என வலுக்கட்டாயமாக திணிப்பு செய்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி 100வார்டுகளில் ஸ்மார்ட் சிட்டி மைய சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது

105 கோடி செல்லூர் கண்மாய் தூர்வாரியதாக செல்லூர் ராஜு கூறியுள்ளார். இரண்டு நாட்கள் முன்பு ரசாயன கழிவு நுரை பொங்கியது, முறையாக ஆழப் படுத்தியதாக தெரியவில்லை. இது குறித்து ஆய்வு செய்திட வேண்டும் என்றனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் விஜயராஜன் உடனிருந்தனர்.