உலகிலேயே மிக ஸ்லிம்மான 5ஜி ஃபோன்

08 May 2022

இந்தியாவில் அடுத்து அறிமுகம் செய்ய இருக்கும் ஸ்மார்ட்ஃபோன் குறித்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது மோடோரோலா நிறுவனம்.

இந்தப் புதிய ஃபோனின் பெயர் மோடோரோலா எட்ஜ் 30 ஆகும். இந்த ஃபோன் என்பது கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட மோடோரோலா எட்ஜ் 20-யின் அடுத்த வெர்சனாக இருக்கும் என்றும், மோடோரோலா எட்ஜ் 30 ப்ரோவின் மற்றொரு வேரியண்ட் போல இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


மோடோரோலா எட்ஜ் 30 ஃபோன் மே 12ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு ஃபிளிப்கார்ட் தளத்தில் மைக்ரோ சைட் ஒன்றை உருவாக்கி, அதில் மோடோரோலா எட்ஜ் 30 குறித்த டிசைன் மற்றும் வசதிகள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.


விர்ச்சுவல் முறையில் அறிமுகம்


தாங்கள் வெளியிட இருக்கும் இந்த ஃபோன் என்பது உலகிலேயே மிக ஸ்லிம்மான 5ஜி ஃபோனாக இருக்கும் என்று மோடோரோலா நிறுவனம் தெரிவிக்கிறது. மே 12ஆம் தேதி நண்பகலில் விர்ச்சுவல் முறையில் ஃபோன் அறிமுக விழாவை நடத்த மோடோரோலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


மோடோரோலா எட்ஜ் 30 எப்படி இருக்கும்


இந்த புதிய ஃபோனில் மாத்திரை வடிவத்தில் ரியர் கேமரா இருக்கும் என்றும், அது மோடோரோலா எட்ஜ் 30 ப்ரோவை போல காட்சியளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஃபோனின் திக்னஸ் 6.79 எம்.எம். ஆகும். அதாவது 7.3 எம்.எம். கொண்ட ஐஃபோன் எஸ்இ மற்றும் 7.5 எம்.எம். கொண்ட விவோ வி23 ஆகிய ஃபோன்களைக் காட்டிலும் இது மிகவும் ஸ்லிம்மாக இருக்கும்.


மோடோரோலா எட்ஜ் 30 ஃபோன் என்பது 155 கிராம் எடை கொண்டதாகும். ஆகவே எட்ஜ் 20 (163 கிராம்) மற்றும் எட்ஜ் 30 ப்ரோ (196 கிராம்) ஆகிய ஃபோன்களைக் காட்டிலும் எடை குறைவானதாகும்.


ஸ்னாப்டிராகன் 778ஜி+ எஸ்ஓசி சாஃப்ட்வேர்


ஸ்னாப்டிராகன் 778ஜி சாஃப்ட்வேரின் பூஸ்டட் வெர்சனாகக் கருதப்படும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி+ எஸ்ஒசி சாஃப்ட்வேர், புதிய எட்ஜ் 30 ஃபோனில் இடம்பெறும் என்பதை மோடோரோலா நிறுவனம் உறுதி செய்துள்ளது. ரியர் கேமராவில் 50 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.


ஃபோனின் முன்பக்கத்தில் முழு அளவிலான டிஸ்பிளே கிடைக்கும். அதே சமயம், செல்ஃபி கேமரா குறித்த தகவல் வெளியாகவில்லை.


பேட்டரி திறன் மற்றும் கலர்ஸ்


மோடோரோலா எட்ஜ் 30 போன் என்பது 128 ஜிபி / 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி/8ஜிபி ரேம் ஆகிய இரண்டு வேரியண்ட்களில் வர இருக்கிறது. இதில் 4020 எம்ஏஹெச் திறன் கொண்ட லி-போ பேட்டரி இடம்பெறுகிறது. மெடோர் கிரே, சூப்பர்மூன் சில்வர், அரோரா கிரீன் போன்ற வண்ணங்களில் வருகிறது. இதன் விலை ரூ.36,500ஐ ஒட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது