தி பேட்மேன் ("The Batman" ) ரிலீஸ் 2022ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

06 October 2020

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளிலும் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால் திரைப்படங்கள் வெளியாவது  பாதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில்  ஜேம்ஸ்பாண்ட்  திரைப்படமான நோ டைம் டு டை (No Time to Die) பட வெளியீடு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ராபர்ட் பேட்டின்சன் நடிப்பில் உருவாகி வரும் தி பேட்மேன் திரைப்பட வெளியீடும் அடுத்த ஆண்டு அக்டோபரிலிருந்து 2022ம் ஆண்டுக்கு  ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.