திமுகவினரை பார்க்க வரும் கூட்டம்; ஓட்டு போடும் கூட்டம் அல்ல - அமைச்சர் செல்லூர் ராஜு

29 November 2020

தேனி மாவட்டம் லோயர் கேம்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக மதுரைக்கு வரும் முதல்வருக்கு அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கான ஆலோசனை கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரைக்கு டிசம்பர் 4 ம் தேதி வரும் முதல்வருக்கு அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். மதுரை மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் கிடைப்பதற்கான திட்டமே லோயர் கேம்ப் திட்டம்.
இந்த திட்டத்தின் மூலம் மதுரையில் வசிக்கும் குடிமக்களுக்கு முறையான குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ரஜினி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஓடு நாளை நடத்தும் ஆலோசனை கூட்டம் தொடர்பான கேள்விக்கு, ரஜினிகாந்த் தெளிவான முடிவெடுப்பார். அவர் ஒரு தெளிவான மனிதர்.நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதாக பலமுறை பலர் சொல்லியிருந்தாலும் அவர் நேரடியாக இன்னும் சொல்லவில்லை. அதனால் நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் தான் அதைப் பற்றி கருத்து சொல்ல முடியும். அவர் கொள்கை முடிவு என்ன என்பதை கட்சி ஆரம்பித்தே பிறகே கூற முடியும். முதல்வரின் சுய முயற்சியில் திராவிட இயக்கத் தலைவர்களின் பரிணாமத்தில் சமூக நீதி காத்த ஜெயலலிதா வழியில் சட்ட பேரவையில் 7.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்து தனை நடைமுறைப்படுத்தினார்.

மக்கள் மத்தியில் முதல்வருக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய நற்பேரால் ஏற்பட்டுள்ள வயிற்றெரிச்சல் தான் ஸ்டாலின் தற்போது குற்றச்சாட்டு வைக்கிறார். விரக்தியின் உச்சிக்கே ஸ்டாலின் சென்றுவிட்டார். மருத்துவ சீட்டு விவகாரத்தில் திமுக ஆட்சிகாலத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக ஆட்சிக்காலத்தில் அரசு பள்ளிகளில் இருந்து மருத்துவம் படிக்க சென்றவர்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால் முதல்வரின் இடஒதுக்கீடு நடவடிக்கையால் தற்போது அரசு பள்ளி மாணவர்கள் அதிகமானோர் மருத்துவம் பயில செல்கின்றனர்.

முதல்வர், துணை முதல்வர் இணைந்து எடுத்த நடவடிக்கையையும், அதிமுக அரசுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த நற்பெயரையும் தட்டிப்பறிக்க நினைக்கிறார் ஸ்டாலின். ஸ்டாலினின் எண்ணம் பலிக்காது. மக்களுக்கு தெளிவாக தெரியும். எதிர்க்கட்சிகளுக்கும் இது தெரியும். அதிமுக அரசை கடுகளவு கூட குற்றம் குறை சொல்ல முடியாது.

கொரானா காலத்தில் கூட சிறந்த நிர்வாகத்தை நடத்தி மத்திய அரசின் விருதுகளை தமிழக அரசு பெற்று வருகிறது. விருது மேல் விருது பெறக்கூடிய அரசு அதிமுக அரசு. சட்டம் ஒழுங்கை பேணி காத்து வருகிறது. அதிமுக அரசால் எந்தவிதமான பாதிப்பும் மக்களுக்கு ஏற்படவில்லை. 2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக அரசு ஆட்சி அமைக்க வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகிறார்கள்.

இந்த விரக்தியின் வெளிப்பாடே ஸ்டாலின் தற்போது புலம்பிக் கொண்டு உள்ளார். எடப்பாடியில் கனிமொழிக்கு அதிகளவு மக்கள் கூட்டம் கூடியது குறித்த கேள்விக்கு, கனிமொழிக்கு கூட்டம் கூடுகிறது என்றால் அவர் கலைஞரின் மகள், எத்தனையாவது மகள் என்பதை பார்க்கவே மக்கள் கூட்டமாக கூடுகின்றனர் என ஒருமையில் பேசினார்.

உதயநிதிக்கு கூட கூட்டம் கூடுகிறது அவர்கள் எல்லோரும் ஓட்டு போடுவார்களா?இவர்கள் வெறும் பார்க்க வரும் கூட்டம் ஓட்டு போடும் கூட்டம் அல்ல. மக்கள் தீர்க்கமாக சிந்தித்து முடிவெடுக்க கூடிய திறன் படைத்தவர்கள். எந்த ஒரு அரசையும் ஸ்திரமாக அமைக்க கூடியவர்கள் மக்கள். அதிமுக அரசைப் போல எந்த அரசும் மக்களுக்கு செய்யவில்லை.

உதயநிதிக்கு கூடும் கூட்டத்தை கண்டு அதிமுக அரசு பயப்படுகிறது என்பது குறித்த கேள்விக்கு, நாங்கள் யாரைக் கண்டும் பயப்படுவதில்லை. நாங்கள் ஜெயலலிதாவின் வாரிசுகள்.சிங்கத்தின் வாரிசுகள். யாருக்கும் எவருக்கும் பயப்பட மாட்டோம. நாங்கள் பயப்படக்கூடிய ஒரே ஆள் மக்கள் தான். அவர்களுக்கு மட்டுமே பயந்து கொண்டுள்ளோம். அவர்களால் தான் நாங்கள் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஆனோம்.

அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே பதவியேற்றுள்ளோம். ஆகவே வாக்காளர்களை கண்டு மட்டுமே வ
பயந்துள்ளோம். எதிர்க்கட்சிகளுக்கும் எதிர்க்கட்சி கூட்டும் கூட்டத்தை கண்டும் பயப்படவில்லை. நடிகர் தவக்களை கூட மதுரை வந்த போது கூட மிகப் பெரிய அளவில் கூட்டம் கூடினார்கள்.

அதைப்போலவே ஸ்டாலின் மகன் என்பதாலும், உதயநிதி ஸ்டாலினை பார்க்கவும் கூட்டம் கூடி இருப்பார்கள். அவர்கள் ஓட்டு போடுவார்களா என்பது தெரியாது. யார் யாரையோ பார்த்து இருக்கிறோம் உதயநிதி ஸ்டாலினுக்கு எல்லாம் நாங்கள் பயப்படுவோமா?சசிகலா வருகை குறித்த யுகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல விருப்பமில்லை.

தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுவினியோக கடைகளை மேடான பகுதிகளுக்கு கொண்டு செல்ல கூறியுள்ளோம்.தேவையான உணவுப் பொருட்கள் தயாராக வைதௌதிருக்க வேண்டுமென உணவுத் துறை அதிகாரிகளிடம் சொல்லி உள்ளோம்.

எங்கள் கூட்டணிக் கட்சி நண்பர்கள் எது சொன்னாலும் நாங்கள் அதை குறை சொல்லவில்லை. கூட்டணி நண்பர்கள் கூறும் கருத்தை வேற்றுமை படுத்திப் பார்ப்பதில்லை. அவர்கள் கட்சி தொண்டர்களை ஊக்கப்படுத்துவதற்காக அவ்வாறு பேசுகின்றனர் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.