துப்பாக்கிக்கு லைசென்ஸ் தேவையில்லை கருக்கலைப்பு கூடாது

03 September 2021

அமெரிக்க நாட்டின் இரண்டாவது பெரிய மாகாணம் டெக்சாஸ். இந்நிலையில் அங்கு புதிதாக இரண்டு சட்டங்களை மக்களின் எதிர்ப்பையும் கடந்து அமல் செய்துள்ளது மாகாண அரசு. அது தற்போது உலகம் முழுவதும் பேசு பொருளாகி உள்ளது. 

அரசு கொண்டு வந்த சட்டம் என்ன?

பொது இடங்களில் துப்பாக்கியை மக்கள் ஏந்தி செல்ல அனுமதி அளிக்கிறது முதல் சட்டம். துப்பாக்கியை எடுத்து செல்பவர்களுக்கு முறையான பயிற்சி கூட அவசியம் இல்லை என சொல்லப்பட்டுள்ளது. அதோடு அந்த செயல் சட்டப்பூர்வமானது என சொல்கிறது முதல் சட்டம். 

அதே போல இரண்டாவது சட்டம், ஆறு வார காலம் கடந்த கருவை கலைக்க கூடாது என்கிறது. குறிப்பாக கருவின் இதய துடிப்பை ஆறு வாரத்திற்கு பிறகே உணர முடியும் என சொல்லப்படுகிறது. அத்தகைய சூழலில் தாய்மார்கள் தாங்கள் கருவுற்ற செய்தியை கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை என்ற வாதமும் முன் வைக்கப்படுகிறது. 

மறுபக்கம் இந்த சட்டம் அமெரிக்க கருக்கலைப்பு உரிமைக்கு எதிராக உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. 


இந்த சர்ச்சைக்குரிய சட்டத்தை அந்த மாகாணத்தை ஆளும் ஆளுநர் கிரேக் அபாட் கொண்டு வந்துள்ளார். இவர் குடியரசுக் கட்சியை சேர்ந்தவர் 

அதனை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்த்துள்ளார். மேலும் அரசியலமைப்பு உரிமையை மீறும் விதமாக இது இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த சட்டத்திற்கு தடை விதிக்க அமெரிக்காவின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூட மறுப்பு தெரிவித்துவிட்டது