செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 3 மாணவிகள் நீட் தேர்வில் மாநில அளவில் சாதனை

20 November 2020

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகளில் 11 பேர் நீட் தேர்வில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டின் கீழ் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அனைவரும் கலந்தாய்வில் கலந்து கொண்டனர், அதில் 3 பேருக்கு பொது மருத்துவத்திலும், 1 பல் மருத்துவத்திலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 பேர் காத்திருப்பேர் பட்டியலில் உள்ளனர்.

அதன்படி செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவிகள் மூன்று பேருக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டினால் எம்.பி.பி.எஸ் சீட்டு கிடைத்துள்ளது. பி.யமுனா - கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி, சென்னை, எம்.பவித்ரா - கற்பக விநாயக மருத்துவக் கல்லூரி, மதுராந்தகம், ஆர்.சுஜீதா – செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டில் எம்.பி.பி.எஸ் சீட்டு கிடைத்துள்ளது.

அதேபோல் அரசு மேல்நிலைப்பள்ளி, புரிசை வி.ஆகாஷ் – பல் மருத்துவக் கல்லூரி, நாமக்கலில், பல் மருத்துவ படிப்பு கிடைத்துள்ளது. மேலும் செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஒருவர் காத்திருப்பேர் பட்டியலில் இருக்கிறார்.

ஒரே பள்ளியில் பயின்ற 3 மாணவிகள் எம்.பி.பி.எஸ் சீட்டு கிடைத்துள்ளதால், தற்பொழுது பயின்று வரும் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓர் உற்சாகமும் தன்னம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது. இம்மாணவிகளை பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பலர் பாராட்டி வருகின்றனர்.

வருங்காலத்தில் தமிழகத்தில் அரசு பள்ளி பயிலும் மாணவ மாணவிகள் மருத்துவத்துறையில் சாதனை புரிவார்கள். மேலும் பெற்றோர்கள் மத்தியில் அரசு பள்ளியின் தரம் மென்மேலும் உயரம்.

ஜி.விஜயகுமார்
செய்யாறு, செய்தியாளர்