சூரியூரில் நடைபெற்ற திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

20 January 2021

சூரியூரில் நடைபெற்ற திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது
போட்டியில் 589காளைகள், 369மாடுபிடிவீரர்கள் பங்கேற்றனர்.
39பேர் காயம்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஆண்டுதோறும் தை இரண்டாம் தேதி திருச்சி மாவட்டம்  ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.
 இந்த ஆண்டு தொடர் மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது.
முதலில் திருச்சி வருவாய் கோட்டாச்சியர் விஸ்வநாதன் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள்  உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதனை தொடர்ந்து
 முன்னாள் எம்.பியும், அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான  ப.குமார் கொடியசைத்து  தொடங்கிவைத்தனர்.

முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது
அதனை தொடர்ந்து அடுத்தடுத்து காளைகளை வாடிவாசல் வழியாக சீறிபாய்ந்தன.
இதில் 589 காளைகள், 369மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
சீறிபாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜல்லிகட்டு போட்டியின் போது 39 பேர் காயமடைந்தனர். அதில் 4 பேர் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
16காளைகளை அடக்கி புதுக்கோட்டையை சேர்ந்த சிவா என்பவர் முதல் பரிசான டூவீலரை பெற்றார்.
சுகாதார துறை அமைச்சர்  விஜயபாஸ்கரின் காளை சிறந்த ஜல்லிகட்டு காளையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. 

கொற்றவை செய்திகளுக்காக திருச்சி செய்தியாளர் ஹரிஹரன்