பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தந்தை, பிரெஞ்சுக் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

01 January 2021

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனின் (Boris Johnson) தந்தை, பிரெஞ்சுக் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான தமது உறவைத் தொடரும்நோக்கில், அந்த முடிவை எடுத்துள்ளதாக 80 வயதாகும் திரு. ஸ்டான்லி ஜான்சன் (Stanley Johnson) கூறினார்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினரான அவர், 2016ஆம் ஆண்டில் பிரிட்டன், ஒன்றியத்தைவிட்டு வெளியேறக்கூடாது என்று வாக்களித்தார்.

தமது தாய், தாத்தா, பாட்டி உள்ளிட்ட முன்னோர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், பிரெஞ்சுக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதன் மூலம் தமக்குச் சொந்தமானதை மீட்டுக்கொள்வதாக அவர் பிரெஞ்சில் குறிப்பிட்டார்.

அவருடைய மகனான பிரதமர் போரிஸ், பிரிட்டன் ஒன்றியத்தைவிட்டு விலக வேண்டும் என்று பிரசாரம் செய்ததில் முன்னணி வகித்தார்.

அதிகாரக் கெடுபிடிமிக்க ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகி, பிரிட்டன் தனி அரசுரிமை பெற்ற நாடாக மாறினால், ஏராளமான நன்மைகளைப் பெறமுடியும் என்று அவர் பிரசாரம் செய்துவந்தார்.

பிரிட்டன், அதிகாரப்பூர்வமாக இன்றிரவு ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு விலகும்.