எடுத்த முடிவில் மாற்றமில்லை அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

15 October 2020

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் கியூபா போன்ற சர்வாதிகார நாடுகளைத் தெரிவு செய்தமைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ விசனம் வெளியிட்டுள்ளார்.ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இருந்து விலகுவதற்கு அமெரிக்கா எடுத்த முடிவு சரியென்பதை இந்த நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.இதில், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் 139 வாக்குகளைப் பெற்று சீனாவும் தெரிவானது.இதேவேளை 2016ஆம் ஆண்டில் இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்ட ரஷ்யா, இம்முறை 158 வாக்குகளைப் பெற்று மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.