அதிமுகவை பயமுறுத்தி பாஜக தன்னை பலப்படுத்தபார்க்கிறது

19 February 2021

அதிமுகவை பயன்படுத்தி காலுன்ற பார்க்கிறது, அதிமுகவை பயமுறுத்தி பாஜக தன்னை பலப்படுத்தபார்க்கிறது  பாசிச பாஜக ஆட்சிக்கும் அடிமை அரசுக்கும் பாடம் புகட்டும் தேர்தல் இது என திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு.


 இந்தியக் கம்யூகிஸ்ட் கட்சி மதுரையில் அரசியல் எழுச்சி மாநாடு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு   மதுரை பிப் 18 இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் எழுச்சி மாநாடு அதன்மாநிலச் செயலாளர்  இரா முத்தரசன் அவர் தலைமையில்  மதுரை  வண்டியூர் பகுதியில் .நடந்தது இதில் பொதுச் செயலாளர் டி.ராஜா  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ   விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்  தொல் திருமாவளவன்  மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம் எச் ஐவாஹிருல்லா  கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம் காதர் மொய்தீன்  உள்பட முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொண்டார்கள் இந்த மாநாடுகளில் தமிழகம்  முழுதுவம் அனைத்து .நிரவாகிகள்    பங்கேற்றனர்   மதுரையில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறும் அரசியல் எழுச்சி மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியபோது:

தொழிலாளர்களின் தோழனாகவும், பாட்டாளிகளின் பாதுகாவலானாகவும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றி


இது இந்திய கம்யூனிஸ்ட் மாநாடாக இருந்தாலும் திமுக மாநாட்டில் கலந்துகொள்வது போன்றே அதே உணர்வோடு உள்ளேன் 


சோவியத் ஸ்டாலின் இல்லாமல் கம்யூனிச தத்துவம் எப்படி இருக்க முடியாதோ அதேபோல தான் இந்த ஸ்டாலின் இல்லாமல் கம்யூனிஸ்ட் மாநாடு நடத்த முடியாது என்கிற உணர்வோடு என்னை அழைத்திருக்கீறிர்கள்

நாம் ஒரே கொள்கையோடு உள்ளவர்கள் என்ற பாசத்தால் இங்கே ஒன்றிணைந்துள்ளோம்.

திராவிட கட்சி இல்லையனில் கம்யூனிச கட்சியில் ஏற்றுகொண்டிருப்பேன் என கருணாநிதி கூறியுள்ளார்

1990ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அறிவித்தவர்


திமுக ஆட்சியில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எண்ணத்தை நிறைவேற்றிய அரசு அதே நிலை வரும் தேர்தலிலதிமுக ஆட்சியிலும் தொடரும் 

வரும் தேர்தல் லட்சியத்திற்கான, ஆட்சிமாற்றத்திற்கான தேர்தல், கொள்ளை கூட்டத்தில் ஆட்சியை பறித்து கொள்கை உடையோரிடம் வர வேண்டும் 

அதிமுக மூலம் தமிழகத்தில் காலூன்றி நினைக்கிறது பாஜக

தனது ஊழலை மறைக்க அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது

மோடி ஓபிஎஸ் ஈபிஎஸ் கையை உயர்த்தியுள்ளார் ஊழல் கரங்களை உயர்த்தி ஊழலுக்கு உதவி செய்வதை வெளிப்படுத்தியுள்ளார்

மோடியின் ஒரு கரம் காவி மறு கரம் கார்ப்பேரட் கரம் அதோடு ஊழலையும் கரம் கோர்த்துள்ளார்.

விவசாயிகளின் வாழ்வாதரத்தை சிதைத்த மோடி ஔவையார் பாடலை கூறலாமா?

மோடி ஆட்சியில் ஆண்டுதோறும் மீனவர்கள் மீதான தாக்குதல் அஅதிகரித்துவருகிறது

மோடி ஆட்சியில் சொந்த நாட்டு மக்கள் மீதே பொருளாதார தாக்குதல் நடத்துகிறது,

பெட்ரோல், டீசல் விலை, சமையல் கியாஸ் விலை உயர்வுதான் மோடி அரசு தொடர்ந்து மக்களுக்கு தரும் பரிசு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையிலும் பெட்ரோல் விலை உயர்கிறது.

பெட்ரோல் விலை உயர்வால் காய்கறி, போக்குவரத்து கட்டணம்என  அனைத்து பொருட்களின் விலைவாசி உயரும் 

பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து கூட தட்டிகேட்கமுடியாத அரசாக உள்ளது, மாநில உரிமைகளை தாரை வார்த்துவிட்டனர் தாரை வார்க்கும் அரசாக உள்ளது

தாமதிருத்திருந்தால் கல்வி, வேளாண்மை, மின்சாரம், தமிழ் ஆகியவற்றில் மாநில அரசின் உரிமையை தாரைவார்த்துவிட்டனர்.

மதுரையில் எய்ம்ஸ் மோடி அரசு மனசுவைத்தால் வரும் என்ற நிலை மாறி  இப்போது ஜப்பான் நிதி கொடுத்ததான் வரும் என்ற நிலை உருவாகியுள்ளது.

மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு தரவில்லை

எடப்பாடி அரசை ஒரு அரசாகவே மத்திய அரசு மதிக்கவில்லை

வரும் தேர்தல் நிகழ்காலத்திற்கு அல்ல எதிர்காலத்திற்கான முக்கிய தேர்தல்

அதிமுகவை பயன்படுத்தி காலுன்ற பார்க்கிறது, அதிமுகவை பயமுறுத்தி பாஜக தன்னை பலப்படுத்தபார்க்கிறது  பாசிச பாஜக ஆட்சிக்கும் அடிமை அரசுக்கும் பாடம் புகட்டும் தேர்தல் இது

பெரியார், அண்ணா, காமராஜர், தோழர் ஜீவா, கலைஞரின்  தமிழ்நாடு என்பது இது என்பதை நிரூபிக்க வேண்டும் என்றார். 

உன்னத தலைவர்களால் உரம் போட்டு உருவாக்கப்பட்ட தமிழகத்தில் இழந்த உரிமையை மீட்க பாடுபட வேண்டும்