வேளாங்கண்ணி பெருவிழாவின் 9வது நவநாள் தேர்த்திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

07 September 2021

வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழாவின் 9வது நவநாள் தேர்த்திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், கீழ்த்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்கு உரியது. ஆலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 29ம் தேதி பக்தர்கள் பங்கேற்பு இன்றி எளிய முறையில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

அதனைத் தொடர்ந்து 10 நாட்களுக்கு தேர்பவனி நடைபெறும். அதன்படி 9வது நாளான நேற்று தேர்பவனி நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்ரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கில் சம்மனை, செபஸ்தியார் சூசையப்பர். அந்தோனியார், ஆரோக்கியமாதா ஆகிய 5 சொருபங்களோடு ஆலய உட்பிரகாரத்தில் மட்டுமே சுற்றி வலம் வந்தது.

இதில், கொரானா நோய் பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள், பேராலய ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று மாலை நடைபெறுகிறது.