காவல் துறையில் பெண்கள் 50வது பொன்விழா ஆண்டு சைக்கிள் பேரணிக்கு உளுந்தூர்பேட்டையில் உற்சாக வரவேற்பு

20 March 2023

காவல் துறையில் பெண்கள்  50வது பொன்விழா ஆண்டு சைக்கிள் பேரணிக்கு உளுந்தூர்பேட்டையில் உற்சாக வரவேற்பு 

தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் 50வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண் காவலர்களின் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான 700 கிலோமீட்டர் சைக்கிள் பேரணியை கடந்த 17ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.  சேலம் மாவட்ட உதவி ஆணையர்  லாவண்யா அவர்களின் தலைமையில் சைக்கிள் பேரணியாக வந்த பெண் காவலர்களை இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகே கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மோகன்ராஜ் அவர்களின் தலைமையில் பேண்ட் வாத்தியங்களுடன்  பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பெண் காவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கொற்றவை செய்திகளுக்காக...  இரா.வெங்கடேசன் மாவட்ட செய்தியாளர் / சப்எடிட்டர்